சஜித்தின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பாக கருத்து வெளியிட்டார் செஹான்

கடந்த தேர்தலில், ஜனாதிபதியாக எண்ணி போட்டியிட்டு தோல்வியடைந்த சஜித், தற்போது ஜனாதிபதி கோட்டாபயவின் கீழ் பிரதமராக வர எண்ணுகின்றாரென முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத்தின் வேட்பாளருமான செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறப்பிட்டுயள்யார். செஹான் மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்க்கட்சியினருக்கு சமூகத்தில் கொரோனா நோயாளிகள் மீண்டும் தோன்றி பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடைய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்

நாம் எதிர்க்கட்சியினரின் தேவையை நிறைவேற்றுவதற்கன்றி இந்நாட்டில் தற்போதைய ஜனாதிபதிக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களுக்காகவே பணி செய்கிறோம்.

இன்று எதிர்க்கட்சியினரின் போராட்டம் நாடாளுமன்றத்தில் அதிகாரத்தை கைப்பற்றுவதல்ல கட்சிக்குள்ளேயே உள்ளது. யார் அதிக ஆசனங்களை வெல்வது என்ற போட்டியுள்ளது. இன்று அவருக்கு சிறிகொத்தவின் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டியுள்ளது.

மேலும் கடந்த தேர்தலில் தன்னை ஜனாதிபதியாக எண்ணியே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இன்று தற்போதைய ஜனாதிபதி கோட்டாபயவின் கீழ் பிரதமராக வர எண்ணுகின்றார்.

சஜித் இன்று வேறாக தேர்தலில் போட்டியிட எண்ணினாலும் அக்கட்சியின் முக்கியமானவர்கள் விலகியுள்ளார்கள். எதிர்வரும் ஓகஸ்ட் 5ம் திகதி தேர்தலின் பின்னர் மீண்டும் ரணில் விக்ரமசிங்கவிடம் செல்வார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை  சஜித் பிரேமதாசவின் செயற்பாடு 7 வயது சிறுவனின் செயற்பாடு போன்று உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  மாத்தளை மாவட்ட வேட்பாளர் பண்டார தென்னக்கோன்  தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “பொதுதேர்தலில் தன்னுடன் போட்டியிட்டு வெற்றியடையுமாறு சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.

உண்மையைக் கூறப்போனால், எனக்கு 7 வயதில் மகனொருவன் இருக்கின்றான். அதாவது எனது மகனும் இப்படித்தான் அதிகளவு கற்களை சேகரிப்பது யார், அதிகளவு ஓடுவது யார் என்று சிந்திப்பான். இத்தகையதொரு சிந்தனையில்தான் சஜித்தும் உள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.