ரிசாட் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காகவே ரிசாட் பதியுதீன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மத்தியவங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார ஆலோசகர் பாஸ்கரலிங்கம், மக்கள் வங்கியின் முன்னாள் பொதுமுகாமையாளர் ஆகியோரிடமும் வாக்குமூலத்தை பெறுமாறும் சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.