கொரோனா வைரஸ்: மத்திய கிழக்கில் 23 இலங்கையர்கள் உயிரிழப்பு
மத்திய கிழக்கில் கடந்த மூன்று மாதங்களில் 23 இலங்கை தொழிலாளர்கள் கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளனரென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஏழு பேரும், துபாய், அபுதாபி, குவைத், சவுதிஅரேபியா ஓமானில் ஏனையவர்களும் உயிரிழந்துள்ளதாக வேலைவாய்ப்பு பணியகத்தின் பேச்சாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளார்.
இவர்களில் எத்தனைபேர் பணிப்பெண்கள் என்பது தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்பான அச்சம் காரணமாக அந்தநாடுகளின் முறைப்படி இறுதிசடங்குகள் இடம்பெற்றுள்ளன எனவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்களும் அதற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் மங்கல ரந்தெனிய கூறியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை