கல்முனையில் புலனாய்வு உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டு மரணம்!!!

பாறுக் ஷிஹான்

 அரச புலனாய்வு உத்தியோகத்தர் கடமை அறையில்  துப்பாக்கியால் சுட்டு  மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(19) மாலை 7 மணியளவில் அம்பாறை – கல்முனை பொலிஸ் நிலையத்தில் உள்ள அரச புலனாய்வு பிரிவில்    இடம்பெற்றுள்ளது.

இத் துப்பாக்கி சூட்டில் மரணமானவர் யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் மத்தி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய   கே.கமலராஜ்  என்ற   அரச புலனாய்வு உத்தியோகத்தராவார்.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு பிரிவு காரியாலயத்தில் கடமையாற்றிவரும் குறித்த உத்தியோகத்தர் சம்பவ தினமான இன்று மாலை 6.30 மணியளவில்  காரியாலயத்தில் தனிமையில் இருந்துள்ள நிலையில் பாதுகாப்புக்காக வைத்திருந்து (பிஸ்டல்) கைதுப்பாக்கியால் தனக்கு தானே தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை இடம்பெற்று வருவதாக  கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்