பொறுப்புக்கூறலிலிருந்து தப்ப முடியாது மைத்திரி! மஹிந்த அணி திட்டவட்டம்

“உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பொறுப்புக்கூறலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் தப்ப முடியாது.”

– இவ்வாறு மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதிக்கே இருக்கின்றது. அந்தவகையில் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறியமையின் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தினமன்று குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

எனவே, இந்தச் சம்பவத்துக்கு நல்லாட்சியின் இரு தலைவர்களான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பொறுப்புக்கூறியே ஆகவேண்டும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்