இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சாலிய பீரிஸ்

ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் எதிர்வரும் 2021 இல் நடைபெறவுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் கருத்து பதிவிட்டுள்ள காணாமற்போனோருக்கான அலுவலகத்தின் தலைவரான சாலிய பீரிஸ், சட்டத்தரணிகள் சங்கம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுக்க எப்போதும் முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2015 முதல் 2017 வரை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்ததாகவும் தற்போது எடுத்துள்ள முடிவு தொடர்பாக சங்கத்தின் உறுப்பினர்களை சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ கடந்த பிப்ரவரி மாதம் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.