நாவாந்துறையில் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டிய இரண்டு பேர் கைது

யாழ்.நாவாந்துறைப் பகுதியில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 520 கிலோகிராம் மாட்டிறைச்சி கண்டெடுக்கப்பட்டதோடு இறைச்சிக்காக வெட்டுவதற்கு தயாராக கட்டி வைத்திருந்த மூன்று மாடுகளும் இரண்டு ஆடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் சட்டவிரோதமாக கால்நடைகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதாக அப்பகுதி பொதுமக்களால் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இத்தகவலின் அடிப்படையில் இன்று (சனிக்கிழமை) காலை அங்கு மாநகர சபை ஊழியர்களுடன் சென்ற பொது சுகாதார பரிசோதர்கள் அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து இறைச்சி வெட்டப்படும் இடத்தினை முற்றுகையிட்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.