3,000 ராணுவத்தினரை கொன்றேன் என்பதுதான் கோட்டாவுக்கு கருணாவின் பிறந்தநாள் வாழ்த்து – விசனிக்கின்றார் மங்கள 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர்  மங்கள சமரவீர, தாம் எத்தனை படையினரைக் கொன்றோம் என்று கூறி, அது குறித்துப் பெருமையடைவதுதான் ‘போர்வெற்றி’ ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சி வேட்பாளர் கருணா அம்மான் வாழ்த்துத் தெரிவிக்கின்ற முறையா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாவிதன்வெளி பிரதேசத்தில் மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றிய தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின்  தலைவரும் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), “இம்முறை தேர்தலில் போட்டியிட்டு எனது மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு வருகின்றேன் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கூறினேன்” என்றும், “கொரோனாவின் காரணமாக 9 பேர்தான் உயிரிழந்தார்கள். எனினும், நாம் ஆனையிறவில் ஒரே இரவில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரையிலான இராணுவத்தினரைக் கொலை செய்தோம்” என்றும் வெளியிட்ட கருத்துக்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்தநிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிறந்தநாளுக்கு தனது ‘ருவிட்டர்’ பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்திருக்கும் மங்கள சமரவீர மேற்கண்டவாறு கேள்வியும் எழுப்பியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.