வத்தளை- திக்கோவிட கடற்பரப்பில் நீரில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு

வத்தளை- திக்கோவிட கடற்பரப்பில் நீரில் மூழ்கி 4 பேர்  உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 16, 20, 30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மூவரும்,  14 வயது சிறுவன்  ஒருவருமே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், உஸ்வேடகெயாவ, கந்தானை மற்றும் பதுளை பகுதிகளில் வசிப்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று மாலை, திக்கோவிட கடற்பரப்பில் குளிக்கச் சென்றபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.