இனவாதிகளின் கருத்துக்களை அடக்கவேண்டும் கோட்டாபய! ஜனாதிபதிக்கு சம்பந்தன் எச்சரிக்கை

நாட்டில் நல்லிணக்கத்தையும் அரசியல் தீர்வுக்கான பணிகளையும் குழப்பியடித்து முழுநாடும் பௌத்த சிங்கள தேசம் என்ற நிலைப்பாட்டில் இனவாதிகள் கருத்து தெரிவித்து வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அவர்களின் வாய்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அடக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஓர் ஆடி நிலம் கூட தமிழர்களுக்கோ முஸ்லிம்களுக்கோ சொந்தம் இல்லை, இந்த நிலையில் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் சொந்த பூமி என்ற நினைப்பில் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் கருத்துக்களை வெளியிடுவதை உடன் நிறுத்த வேண்டும் என்றும் ஞானசார தேரர் அண்மையில் தெரிவித்திருந்தார்

இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

அத்தோடு வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்றும் இதில் மாற்றுக்கருத்து இடமில்லை எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அரசின் ஆதரவுடன் தெற்கில் இனவாதிகள் இயங்குகின்றனர் என்ற கருத்து அனைவரது மத்தியிலும் இருக்கின்றது என்றும் எனவே இவ்வாறானவர்களுக்கு ஆதரவு வழங்குவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்