முல்லையில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர் 1200ஆவது நாளில் கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு- வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், தொடர்போராட்டத்தின் 1200ஆவது நாளில், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரது உறவினரின் அலுவலகத்தின் முன்பாக குறித்த கவனயீர்ப்பு  போராட்டம் நேற்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள், தம்மிடம் தமது உறவினர்கள் கையளிக்கப்பட வேண்டுமெனவும் சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டுமெனவும் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு, பதாதைகளைத் தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் தற்கால கொரோனாத் தொற்று சுகாதார வழிமுறைகளுக்கேற்ப சமூக இடைவெளி பேணப்பட்டு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்