மட்டக்களப்பில் டெங்கு பரவும் பகுதிகளை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பில் டெங்கு பரவுவதற்கான சாத்தியமுள்ளதாக இனங்காணப்பட்ட பகுதிகளை தூய்மைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வடிகான்கள் மற்றும் டெங்கு பரவும் பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் நேற்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளில் மாநகரசபையின் சுகாதார குழுவின் தலைவர் சிவம்பாக்கிநாதன், மாநகரசபை உறுப்பினர்களான திலீப், ஸ்டீபன்ராஜன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது நீரோட்டமின்றி தேங்கி நின்ற வடிகான்கள் தூய்மைப்படுத்தப்பட்டு நீர் வழிந்தோடச் செய்யப்பட்டதுடன் நுளம்பு பெருக்கம் உள்ள பிரதேசங்களும் தூய்மைப்படுத்தப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.