பொத்துவில் முஸ்லிம்களின் வாழ்வுரிமைப்போராட்டம்! கணிகளை கபளீகரம் செய்ய முனைந்தால் வெடிக்கும் பெரும் பேராட்டம்!..

“பொத்துவில் முகுது மகா விகாரைப் பகுதியில் ரூபவ் தொல்லியல் அளவீடு எனும் போர்வையில் முஸ்லிம் மக்களின்
காணிகளை ஒரு தலைப்பட்சமாக கபளீகரம் செய்ய முற்பட்டால் ரூபவ் பாரி போராட்டம் வெடிக்கும் ரூபவ் கிழக்கு
முஸ்லிம்களை அணி திரட்டி போராட்டத்தை முன்னெடுப்போம்.”
இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சரும்ரூபவ் திகாமடுள்ள மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாருமான
எச்.எம்.எச்.ஹரீஸ் எச்சரிக்கை விடுத்தார்.

மாவடிப்பள்ளியிலுள்ள தனது அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை நடத்திய ஊடக வியலாளர் சந்திப்பொன்றின்
போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

புராதன தொல்பொருள்மையங்களைப் பாதுகாத்தல் எனும் போர்வையில் பொத்துவில் முகுது மகாவிரைப் பகுதியில்
மேற்கொள்ளப்படும் தொல்பொருள் காணி அளவீடு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் இதன்போது கடும் தொனியில் கருத்து வெளியிட்டார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடுகையில்
பின்வருமாறு கூறினார்.

“பொத்துவில் முகுது மகா விகாரைப் பிரதேசத்தில் நில அளவை திணைக்களரூபவ் தொல்பொருள் அதிகாரிகள் காணி
அளவீடுகள் செய்யும் விவகாரம் இன்று பூதாகரமாக மாறியுள்ளது.
இந்த விவகாரத்தினால் அங்கு பூர்வீகமாக வாழும் முஸ்லிம் மக்கள் பெரும் கொதிப்படைந்துள்ளனர்.
முஸ்லிம் மக்களின் குடியிருப்பு பிரதேசங்களைக் கபளீகரம் செய்வதற்கு இங்கு ஒரு தலைப்பட்சமான நோக்குடன்
நில அளவை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

மக்கள் கருத்தைக் கூடக்கேட்காமல் இந்த அடாவடி அரங்கேறுகின்றது அங்குள்ள பௌத்த மதகுரு அரசை
ஆட்டிப்படைக்கிறார்.

இந்த அநீதியை ஒரு போதும் அனுமதிக்க முடியாது முஸ்லிம் மக்கள் குறிப்பாக கிழக்கு முஸ்லிம்கள்
பொத்துவில் முஸ்லிம் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டமான இந்த விடயத்தில் அணிதிரள வேண்டும்.
எம்மக்களின் உரிமைக்காக உச்ச நீதிமன்றத்தின் படியேறவும் நான் தயாராகவுள்ளேன்.

பொதுத் தோர்தல் நடைபெறவுள்ள நிலையில் பௌத்த மக்களைத் திருப்திப்படுத்தவும் ரூபவ் வாக்கு வேட்டைக்காகவும் அரசு
முன்னெடுக்கும் இத்தகைய செயற்பாடுகளைத் தவிர்க்க வேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.