தூக்கு மேடை போகவேண்டியவர்கள் பாராளுமன்றத்தில் அமைச்சர் கதிரை தேடுகின்றனர்…

தூக்கு மேடை போகவேண்டியவர்கள் பாராளுமன்றத்தில் அமைச்சர் கதிரை தேடுகின்றனர் என தேசிய விடுதலை மக்கள் முண்ணனி கட்சியின் தலைவரும் ,அஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை வேட்பாளருமான மொகைதீன் முஸம்மில் தெரிவித்தார்.
முள்ளிப்பொத்தானையில் வைத்து சனிக்கிழமை (20) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்:

ஜனநாயகம் குழிதோண்டி புதைக்க பட்ட சந்தர்ப்பத்தில் மீண்டும் திட்டமிட்ட இரகசிய கொலைகள் ஆரம்பித்த கட்டத்தில் இந்த எதிர்கொள்ளும் 2020 பொது தேர்தல் ஒரு ஜனநாயக தேர்தலாக அமையுமா? என்பது ஒரு பெரிய கேள்விக் குறியாகின்றன. இதே சமயம் முஸ்லிம்கள் மீது சீண்டி விடும் இனவாத செயற்பாடுகள் மிகவும் கவலையை தரும் விடயம்.

இன்று தான் 3000 இலங்கை படையினரை ஒரே தடவையில் படுகொலை செய்ததாக ஏற்றுக்சொல்லும் கருனா அம்மன் ஜனநாயகம் பேசும் ஜனநாயக வாதியாகவும் ஜனநாயகத்தை கட்டிப்பிடித்து ஜனநாயக ரீதியில் தமது சிறுபான்மை உரிமைகளை வென்றெடுக்க போராடிய முஸ்லிம் தலைவர்கள் கொலை குற்ற விசாரணைகளுக்கு ஏற்றி இறக்கப்படுவது மிகவும் மன வேதனைக்குறிய விடயமே!
சில அரசியல் வாதிகள் தேர்தல் காலங்களில் தான் தாம்மேற்கொண்ட அராஜகங்கள் மற்றும் சட்ட விரோத செயற்பாடுகளை செய்து விட்டு தாம் அதனை செய்யவில்லை மற்றவர்கள் தான் செய்தார்கள் போன்ற எண்ணற்ற பொய்களை சொல்லி மக்களை மடையர்களாக ஆக்க நினைப்பது.
இவ்வாரான செயற்பாடுகள் இனி ஒரு போதும் மேற்கொள்ள இயலாது என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்