கிளங்கன் பகுதியில் அனுமதியற்ற கடைகள் அகற்றப்பட்டன பொது மக்கள் விசனம்…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் கிளங்கன் வைத்தியசாலைக்கு முன்னால் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த கடைகள் இன்று (21) வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் அகற்றப்பட்டன.
கிளங்கன் வைத்தியசாலைக்கு முன்னால் ஹட்டன் பொகவந்தலாவை பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த குறித்த கடைகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அகற்றப்பட்டதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக சிலர் தங்களது ஜீவன உபாயமாக கடைகளை நடத்தி வந்ததாகவும் ஆனால் எவ்வித அறிவித்தலுமின்றி கடைகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபை அகற்றியதாகவும்.இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதே நேரம் அனுமதி பெற்ற கடைகளும்  இதன் போது அகற்றப்பட்டதாகவும்  இன்னும் சிலர் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்த தெரியவருவதாவுது குறித்த பகுதியில் இரண்டு மூன்று தினங்களுக்கு முன் புதிதாக ஒரு கடை அமைக்கப்பட்டதாகவும் கடை அமைக்கப்பட்ட தன் காரணமாக முச்சக்கர வண்டி தரிப்பதற்கு இடமில்லாமல் போனதனால் கடை காரருக்கும் முச்சக்கரவண்டி சாரதிக்கும் வாய்தர்க்கம் ஏற்பட்டதாகவும் இதனால் ஆத்திரமடைந்த முச்சக்கரவண்டி சாரதி  குறித்த கடைகளுக்கு எதிராக கொழும்பிலுள்ள பிரதான அலுவலகத்திற்கு அறிவித்தாகவும் அதனை தொடர்ந்தே குறித்த கடைகள் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எது எவ்வாறான  போதிலும் கொரோன தொற்றுக்கு முகம் கொடுத்து இருக்கின்ற காலகட்டத்தில் இவ்வாறு ஜீவன உபாயமாக உள்ள கடைகள் அகற்றப்பட்டதனை ஏற்றுக்கொள்ள முடியாது. என இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதே புதிதாக அமைத்த கடையினை அகற்றுவதனைவிடுத்து அனுமதிபெற்ற கடைகளும் அகற்றப்பட்டமையானது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.