இலங்கையின் ஆரம்ப சுகாதார பாதுகாப்பு முறைமைக்கு உலக வங்கி நிதி உதவி

இலங்கையின் ஆரம்ப சுகாதார பாதுகாப்பு முறைமைக்கு உலக வங்கி நிதி உதவியினை வழங்க முன்வந்துள்ளது.

சுகாதார அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற முன்னேற்ற மறு ஆய்வு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக திட்டம் தொடர்பான சிரேஷ்ட தொடர்பாடல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில், உலக வங்கியின் உயர்மட்ட அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டம் திருப்தி அளித்துள்ளதனை அடுத்தே இந்த அடுத்த கட்ட நிதி உதவி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இலங்கையின் ஆரம்ப சுகாதார பாதுகாப்பு முறைமைக்கு மேலும் ஒரு கோடியே 50 இலட்சம் அமெரிக்க டொலர் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்திற்கு முன்னர் உலக வங்கியின் உயர் மட்ட அதிகாரிகள் நாட்டின் பல பிரதேசங்களுக்கு விஜயம் செய்து உலக வங்கியின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களை நேரடியாக பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.