ரயிலுக்கு முன்பாக பாய்ந்து குடும்பஸ்தர் தற்கொலை: வவுனியாவில் சம்பவம்

வவுனியா- பெரியகட்டு 41ஆவது மைல் கல்லுக்கு அண்மையில் ரயிலுக்கு முன்பாக பாய்ந்து குடும்பஸ்தரொருவர் தற்கொலை செய்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற இந்த  சம்பவத்தில் மன்னார் எழுத்தூரில் வசிக்கும் ஆ.ரகுசங்கர் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, ரகுசங்கர் இன்று காலை தனது காரை,  ரயில் பாதையின் அருகில் நிறுத்திவிட்டு, மன்னார் சென்ற புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சடலம், மடு ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பறையநாளங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.