இந்தியாவில் சிக்கியிருந்த மேலும் சிலர் நாட்டை வந்தடைந்தனர்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் சிக்கியிருந்த மேலும் சிலர் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நாடு திரும்பினர்.
இந்தியாவிலிருந்து 230 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு வருகை தந்த அனைவருக்கும் PCR பரிசோதகைள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இந்தியாவில் தங்கியிருந்த 194 இலங்கையர்களும் இங்கிலாந்தில் தங்கியிருந்த 60 இலங்கையர்களும் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நாட்டை வந்தடைந்திருந்தனர்.
இவ்வாறு வருகை தந்த அனைவருக்கும் விமான நிலைய வளாகத்தில் வைத்தே பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை