நாட்டில் எலிக்காய்ச்சலினால் 2800 பேர் பாதிப்பு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 2,800 பேர், எலிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும்  குறித்த எலிக்காய்ச்சல் நோயால்,  இதுவரையான காலப்பகுதியில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் கேகாலை மாவட்டங்களிலேயே எலிக்காய்ச்சலால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே வைத்தியர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய வாரத்திற்கு ஒருமுறையேனும், உரிய பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு வைத்திய நிபுணர் சுதத் சமரவீர  மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.