கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 28 பேர் குணமடைந்தனர்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 526 பேராக உயர்வடைந்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதேநேரம் இலங்கையில், கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளங்காணப்படவில்லை என சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இறுதியாக அடையாளங்காணப்பட்ட 1950 பேர் மாத்திரமே இதுவரை கொரோனா தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 441 பேர் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்றும் 25 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில், வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி, இலங்கையில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை