கொரோனா வைரஸினால் வெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கை பணியாளர்களுக்கு இழப்பீடு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கை பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், பணியகத்தின் காப்புறுதி நிதியத்தின் ஊடாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் அதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனா வைரஸால் வெளிநாடுகளில் பணிபுரிந்த 23 இலங்கை பணியாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்