இலங்கையில் இதுவரை 95,087 PCR பரிசோதனைகள் முன்னெடுப்பு

இலங்கையில் இதுவரையில் 95,087 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சுகாதார மேம்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 20ஆம் திகதியன்று 827 PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாவும் அதன்போது எந்தவொரு கொரோனா தொற்றுக்குள்ளானவர்களும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அந்தப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டில் அடையாளங்காணப்பட்டட கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 1950 ஆக அதிகரித்துள்ள நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது 1526 ஆக அதிகரித்துள்ளது.

எனினும் கடந்த 48 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுடன் எவரும் அடையாளங்காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.