சட்டத்தை மீறுபவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவர் – தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை

தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் வேட்பாளர் விருப்ப இலக்கம் என்பவற்றினை காட்சிப்படுத்துபவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த மாதத் தொடக்கத்தில், சட்டவிரோத சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை அகற்றுவதற்கு அனைத்து பிரிவுகளிலும் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்