தமிழர்களின் பிரதிநிதிகள் தமிழ்க் கூட்டமைப்பினரே!! மாற்று அணியினரைத் தோற்கடிப்போம்; வடமராட்சி கிழக்கில் சுமந்திரன் சூளுரை 

 “வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே. அதற்கான ஆணையை இம்முறையும் மேலும் வலுவுள்ளதாக வழங்குங்கள்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வடமராட்சி கிழக்கில் வத்திராயன், உடுத்துறை, ஆழியவளை, முள்ளியான், வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு ஆகிய பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட வேட்பாளர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோர் மக்கள் சந்திப்புகளில் ஈடுபட்டனர். இதன்போது சுமந்திரன் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வடக்கு, கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஓர் அணியாக நிற்கின்றார்கள் – ஒரே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார்கள் – அவர்களுக்கு மக்கள் கொடுத்துள்ள ஆணை சிதறுபட்டுள்ளதாக இல்லை – அந்த ஆணை ஒரே கொள்கையின் கீழ் மிகவும் பலமானது – வலுவானது என்பதைப் பொதுத்தேர்தலில் மக்கள் காட்ட வேண்டும். இதனூடாக ஓர் ஆசனத்துகாக ஆசைப்படுகின்ற மாற்று அணிகளை மக்கள் தோற்கடிக்க வேண்டும்” – என்றார்.

இந்த மக்கள் சந்திப்புகளில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.சுகிர்தன், பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் அ.சா.அரியகுமார், ஓய்வுபெற்ற கோட்டக் கல்வி (மருதங்கேணி) அதிகாரி எஸ்.திரவியராசா மற்றும் பருத்தித்துறை பிரதேச சபையின் உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.