தேர்தலுக்கு பின்னர் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு: ஜனாதிபதி

பொதுத்தேர்தல் நிறைவடைந்ததும் முதல் கட்டமாக வேலையற்ற பட்டதாரிகள் தொழில் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பொதுஜன பெரமுனவின் அமைப்பாளரும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான ப.சந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில்  ப.சந்திரகுமார் மேலும் கூறியுள்ளதாவது, “தொல்பொருள் மூலம் கிழக்கில் பௌத்த விகாரைகளை அரசாங்கம் அமைக்கப்போவதாக கூறி சிலர் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இன்று பெரும்பாலான மக்கள் தமிழ் தேசியத்திற்கு அப்பால் அபிவிருத்தியைதான் விரும்புகிறார்கள்.

அந்தவகையில் பொஜன பெரமுனவினால் மட்டுமே மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுக்கமுடியும் என்பதை இன்று தமிழ் மக்கள் உணர்ந்துள்ளார்கள்.

மேலும் பரமசிவம் சந்திரகுமார் ஆகிய நான், பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் அமைப்பாளராக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றேன்.

பொதுஜன பெரமுன கட்சி உருவாக்கப்பட்ட நாள் முதல் இக்கட்சியின் கோட்பாடுகள் பிடித்திருந்ததன் காரணமாக, மட்டக்களப்பில் தமிழ் மக்களின் நிலைமை கேள்விக்குறியாக இருந்ததன் காரணமாக , தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய ஒரே கட்சி பொதுஜன பெரமுன கட்சிதான் என்பதை இனங்கண்டதன் காரணமாக அக்கட்சியில் இணைந்துகொண்டேன்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பொதுஜன பெரமுன கட்சிக்காக பாடுபட்டு இன்று பெரும்பான்மையில் ஆட்சியமைத்து, இந்த ஜனாதிபதியை தெரிவு செய்திருக்கின்றோம்.

இம்முறை  நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயமாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து  நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்து அவர் மூலம் இம்மாவட்டத்திற்கு 1986ஆம் ஆண்டிலிருந்த அபிவிருத்திகளை கொண்டுவருவதற்கு நாங்கள் ஆலோசித்திருக்கின்றோம்.

எட்டுத் தமிழர்கள் இத்தேர்தலில் களமிறங்கியிருக்கின்றோம். தமிழ் மக்கள் கூடுதலாக எங்கள் கட்சியை ஆதரிக்கக்கூடிய நிலைமை காணப்படுகின்றது. மட்டக்களப்பு மக்கள் தேசியம் மற்றும் அபிவிருத்தியையே விரும்புகின்றனர். பொதுஜன பெரமுன கட்சிதான் அபிவிருத்திகளை செய்யும் என்ற நம்பிக்கை மட்டக்களப்பு மக்களுக்கு என்றும் இருக்கின்றது.அதனால் இக்கட்சிக்கு வாக்களித்து எதிர்வரும் காலங்களில் பல அபிவிருத்திகளை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் திடசங்கற்பம் பூண்டு செயற்பட வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலின்போது தான் வெற்றி பெற்றால் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவேன் என உறுதிமொழி வழங்கியிருந்தார். அதற்கமைய திறைசேரியில் பணத்தினை ஒதுக்கி பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கியிருந்தார். தேர்தல் சட்டத்தின் கீழ் இது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.

தேர்தல் நிறைவடைந்ததும் நியமனங்கள் வழங்கப்படும். அந்த உறுதிமொழியை ஜனாதிபதி எமக்கு அளித்துள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.