முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி ஆணையத்தில் இன்று முன்னிலை

முன்னாள் அமைச்சர்கள் ராஜித சேனரத்ன, சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரனதுங்க, அநுர குமார திசாநாயக்க ஆகியோர் இன்று (செவ்வாக்கிழமை) அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணையத்தின் முன்பாக ஆஜராக உள்ளனர்.

இன்று காலை 11.30 மணியளவில் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு, இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இலஞ்ச ஆணைக்குழுவின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவும் இன்று ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கிடையில், முன்னாள் ஆளுநர் ரோஹித போகொல்லாகமவும் இன்று ஜனாதிபதி ஆணையத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

அதாவது இவர், ஜனாதிபதி ஆணையத்தில் அளித்த  முறைப்பாடு தொடர்பாக ஆராய்வதற்காகும் என கூறப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்