ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் அமைச்சர்களிடம் விசாரணை ஆரம்பம்

முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, அநுர குமார திசாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.

எவன்காட் நிறுவனத்தை தன்னிச்சையான முறையில் கையகப்படுத்தியதன் காரணமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, அதன் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவால் 17 பேருக்கு அழைப்பாணை வெளியிடப்பட்டிருந்தது.

அதனடிப்படையிலேயே குறித்த முன்னாள் அமைச்சர்கள், ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.