தபால் மூல வாக்களிப்பு – 47 ஆயிரத்து 430 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

2020 பொதுத் தேர்தலுக்கான தபால் மூலமான வாக்களிப்பில் 47 ஆயிரத்து 430 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான தபால் மூலமான வாக்களிப்பிற்கு 7 இலட்சத்து 53 ஆயிரத்து 37 விண்ணப்பங்கள் கிடைத்தபோதும் அதில் 7 இலட்சத்து 50 ஆயிரத்து 85 பேரே தபால் மூலமான வாக்களிப்புக்கு தகுதி பெற்றனர் என ஆணைக்குழுவின் ஊடகப்பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூலமான வாக்களிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 74 ஆயிரத்து 611 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

தபால் மூலமான வாக்களிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இரண்டாவது மிக அதிகமானவர்கள் அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அங்கு 56 ஆயிரத்து 438 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை வாக்களிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் மூன்றாவது மிக அதிகமானவர்கள் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அங்கு 54 ஆயிரத்து 98 பேர் தகுதி பெற்றுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.