மட்டக்களப்பில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது!

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் கடந்த காலங்களை விட சற்று குறைந்து வருவதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய அதிகாரி வி. குணராஜசேகரம்  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “ஜூன் 07 ஆம் திகதி தொடக்கம்; ஜூன்  12 ஆம் திகதி வரையும் 09 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்.

இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேரும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 02 பேரும் மட்டக்களப்பு, மண்முனைப்பற்று ஆரையம்பதி, கோறளைப்பற்று மத்தி, கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் தலா ஒருவருமாக  மொத்தம் 09 போர் மாவட்டத்தில் இனங் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை வாகரை, வாழைச்சேனை, செங்கலடி, மட்டக்களப்பு, வவுணதீவு, காத்தான்குடி, பட்டிப்பளை, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.