வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கு தயார் – பிரதமர் மஹிந்த

நாடு பிளவுபடாமல் வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்க எமது அரசாங்கம் தயாராக உள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருநாகலில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வடக்கு கிழக்கில் நீண்ட காலம் பணியாற்றியவர் என்பதால் அந்த பகுதி மக்களின் பிரச்சினைகளை அவர் நன்கு அறிந்து வைத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது நாடாளுமன்ற பெரும்பான்மை இன்மை காரணமாகவே ஜனாதிபதியால் அவரது அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியவில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் திட்டங்களிற்கு ஆதரவளிக்ககூடிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கு மக்கள் வாக்களிக்கவேண்டும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை நாடாளுமன்றத் தேர்தலை நடத்திய உடனேயே மாகாண சபைத் தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தேர்தலில் போட்டியிடுவததற்கு அஞ்சியமையினாலேயே கடந்த அரசாங்கத்தால் மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைத்தது என்றும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.