மதத் தலைவரை அவமதிப்பது வீழ்ச்சியின் ஆரம்பம்- மஹிந்த

எந்ததொரு மதத்தையோ அல்லது மதத் தலைவரையோ அவமதிப்பது  வீழச்சியின் ஆரம்பம் என பிரமதர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருநாகல் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற  மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மக்கள் சந்திப்பில் மஹிந்த மேலும் கூறியுள்ளதாவது, “எங்கள் குழு விழிப்புணர்வுடன் செயற்படுகிறது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட வேண்டும்.

இன்று ஐக்கிய தேசியக்கட்சி, பிளவடைந்து காணப்படுகின்றது. அதாவது ஒருபுறம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவுடனான பிரிவு, மறுபுறம் ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உடனான பிரிவு, மாறி மாறி தங்களுக்குள் தொடர்ந்து முரண்பட்டு கொண்டிருக்கின்றன.

இவைகளை பார்க்கும்போது, இவர்கள் வீழ்ச்சியை நோக்கி நகர்ந்து செல்வதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

இத்தகைய செயற்பாட்டினால் அவர்கள், தங்கள் வாக்குகளின் எண்ணிக்கையை மட்டுமே குறைக்கிறார்கள். எந்த வகையிலும் அதிகரிக்கவில்லை என்பதை என்னால் காண முடிகிறது.

இதேவேளை  ஒரு உறுப்பினர், கொழும்பு பேராயரை மிகவும் மோசமான முறையில் அவமதித்ததாக நான் கேள்விப்பட்டேன்.

இவ்விடயம் தொடர்பாக எனது கருத்து என்னவென்று ஒருவர் கேட்டார். அதற்கு நான் கூறினேன், கத்தோலிக்கம் அல்லது வேறு எந்த மதமாக இருந்தாலும், ஒரு மதத் தலைவரை யாராவது அவமதித்தால், அது அவருடைய வீழ்ச்சியின் ஆரம்பம்

அது மட்டுமல்லாமல், அவருடைய கட்சியின் வீழ்ச்சிக்கும் அது ஒரு காரணமாக அமையும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.