அரசாங்கம் கணிசமான எந்த சலுகையும் மக்களுக்கு வழங்கவில்லை – பொன்சேகா

புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டு பல மாதங்கள் நிறைவடைந்த போதிலும் மக்களுக்கு எந்த சலுகையும் இதுவரை கிடைக்கவில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் முக்கிய வேலைகளை செய்ததாக சுட்டிக்காட்டிய அவர் இந்த அரசாங்கம் தற்போது பொதுமக்களுக்கு எரிபொருள் சலுகைகளை கூட வழங்கத் தவறிவிட்டது என்றும் குற்றம் சாட்டினார்.

கம்பஹாவில் இடம்பெற்ற பிரசாரப் பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், கடந்த ஆட்சி காலத்தில் குறைந்த நாட்களுக்குள்ளேயே சுயாதீன ஆணைக்குழுக்களும் நியமிக்கப்பட்டன என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த ஆணைக்குழுக்கள் தற்போது இல்லையென்றால் ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை விரட்டியடித்திருப்பார் என்று சரத் பொன்சேகா குற்றம் சாட்டினார்.

அரசாங்கத்தின் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பது இப்போது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது, மேலும் உலகளவில் எரிபொருள் விலை மூன்றில் இரண்டாக குறைந்துள்ள போதும், எரிபொருள் விலையை குறைக்க மாட்டோம் என்று அரசாங்கம் கூறியுள்ளது.

அதற்கு பதிலாக ரின் மீன் மற்றும் பருப்பு ஆகியவற்றின் விலைகளை குறைத்துள்ளது மேலும் இதுபோன்ற முட்டாள்தனமான நடவடிக்கைகள் மக்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.