தமிழர் பாரம்பரியம் திட்டமிட்ட அழிப்பு: முறியடிக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு! விசனத்துடன் தெரிவிக்கிறார் மாவை

பாரம்பரியம் மிக்க தமிழர் வரலாற்றை மாற்றியமைக்கும் நோக்கில் அரசாங்கம் விசேட ஜனாதிபதி செயலணியொன்றை அமைத்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

எனவே இவ்விவகாரத்தில் தலையிட்டு எமக்கு உதவவேண்டிய தார்மீகப் பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் என்ற போர்வையில் பாரம்பரியம் மிக்க கிழக்கு மண்ணில் தமிழர்களின் வரலாற்றையும், அடையாளத்தையும் அரசாங்கம் மாற்றியமைக்க முயற்சிப்பது ஆரோக்கியமான விடயமல்ல.

எமது நட்பு நாடான இந்தியா இவ்விகாரம் தொடர்பில் தலையீடு செய்வதுடன், எமக்கு உதவவேண்டிய தார்மீகப் பொறுப்பையும் கொண்டிருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரின் டுவிட்டர் பக்கங்களையும் இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்