உகந்தமலை முருகன் ஆலய கொடியேற்ற பக்தர்களின் வருகை தொடர்பான தீர்மானம் வெளியீடு…

கிழக்கின் தென்கோடியிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க உகந்தமலை முருகன் ஆலய கொடியேற்ற பக்தர்களின் வருகை தொடர்பான நிகழ்வுக்கான ஒன்றுகூடலானது அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திரு.வி.ஜெகதீசன் அவர்களின் தலைமையில் 22/06/2020 காலை 10.00 மணியளவில் லகுகல பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
இன் நிகழ்வில் லகுகல பிரதேச முப்படை அதிகாரிகள் , வன ஜீவராசி உத்தியோகத்தர்கள், லகுகல சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர்,ஏனைய திணைக்கள அதிகாரிகள், உகந்தை முருகன் ஆலய வண்ணக்கர் மற்றும் ஆலய பரிபாலன சபையினர் இன் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உகந்தமலை முருகன் ஆலய கொடியேற்றமானது எதிர்வரும் 21/07/2020 அன்று ஆரம்பமாகி 04/08/2020 அன்றையதினம் தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது. இத் திருவிழாக் காலங்களும் வழமை போன்ற காலங்களில் இடம்பெற்ற அனைத்து கிரிகைகளும் பூசைநிகழ்வுகளும் இவ் வருடமும் இடம்பெறும்.
இந்த 15 நாள் திருவிழாக்காலங்களும் ஒவ்வொரு நாளும் எந்த ஊர் பூசையாக இருக்கின்றதோ அந்த ஊர்களில் இருந்து பூசை உபய காரர்கள் 50 பேர் மாத்திரம் பூசைநிகழ்வுகளில் கலந்துகொள்ளமுடியும் கலந்துகொள்ளபவர்கள் மூன்று நாட்களுக்கு முன்னர் கோவிட்-19 தொற்றுக்கு உட்படாதவர்கள் என அப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியினால் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதளினை கொண்டுவருபவர்கள் மாத்திரம் இங்கே பூசை நிகழ்வுகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக் காலங்களில் அன்னதானம், வியாபார  நடவடிக்கைகள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இக் காலங்களில் உகந்தை முருகன் ஆலயத்தினை வழிபட வரும் பக்தர்கள் எவருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது,  பாதயாத்திரையும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது எனவே அனைத்து அடியார்களும் இவ் உற்சவ காலத்தில் அனைவரும் ஒன்று கூடி வழிபடுவது சிறந்தது அல்ல எனவே இத் திர்மானத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.