புஸ்ஸல்லாவையில் இரண்டு சிறுத்தைப்புலிகள் மீட்பு…

(க.கிஷாந்தன்)

 

புஸல்லாவை, எல்பொட தோட்டத்தில் இன்று (23.06.2020)  காலை இரண்டு சிறுத்தைப்புலிகள் மீட்கப்பட்டுள்ளன என்று வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேட்டைப் பொறியில் சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்ட  சிறுத்தைப் புலிகளுள் ஒன்று உயிரிழந்துவிட்டதாகவும், மற்றையது மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியாவுக்கு எடுத்துச்செல்லப்பட்டது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

6 அடி நீளமான இளம்வயதுடைய சிறுத்தைப் புலியே, பொறியில் சிக்கி பலியாகியுள்ளது. வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த பொறியிலேயே இவை சிக்கியுள்ளன.

இலங்கைக்கே உரித்தான அரியவகையான சிறுத்தை, புலி இனங்கள் மலையகத்தில் வாழ்கின்றன என்பது அண்மையில் கண்டறியப்பட்டது. எனினும், குறுகிய காலப்பகுதிக்குள் 5 இற்கும் மேற்பட்ட சிறுத்தை இனங்கள் இறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்