கிங் கங்கையில் மூழ்கி 13 வயது சிறுவன் சாவு…

காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிங் கங்கையில் நீராடச் சென்ற 13 வயது சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.

நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மீஎல்ல, ஹக்மண பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

ஆபத்தான நிலையில் குறித்த சிறுவன் கராப்பிட்டி வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் உயிரிழந்துள்ளான் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சிறுவன் தனது தாய், தந்தை, சகோதரியுடன் உறவினர் வீட்டுக்குச் சென்று, நீராடச் சென்றிருந்தபோது இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளான்.

இது தொடர்பில் காலி பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.