அமெரிக்காவில் சிக்கியிருந்த 217 பேர் இலங்கை திரும்பினர்…
இலங்கைக்கு வர முடியாமல், அமெரிக்காவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 217 பேரை ஏற்றிய எமிரேட்ஸ் விமான சேவையின் விசேட விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இவ்விமானப் பயணிகளுக்கு, அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வருவதற்கான நேரடி விமான சேவை வசதிகள் இல்லாமையால், அவர்கள் டுபாய் ஊடாக இலங்கையை வந்தடைந்தனர்.
அவர்கள் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவையின் EK 2528 எனும் விசேட விமானத்தில், இன்று அதிகாலை 4.47 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இவர்கள் வந்தடைந்தனர்.
இவ்வாறு வருகை தந்த பயணிகள், விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.












கருத்துக்களேதுமில்லை