வரக்காப்பொல வங்கிக்கொள்ளை: சந்தேகநபருக்கு 14 நாட்கள் மறியல்…

வரக்காப்பொல நகரிலுள்ள அபிவிருத்தி வங்கியில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் நேற்று வரக்காப்பொல நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இவ்விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 02ஆம் திகதி இரவு வேளையில், குறித்த வங்கியிலிருந்து 18 இலட்சத்து 66 ஆயிரத்து 843 ரூபா பணமும், 28 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான தங்கநகைகளும் கொள்ளையிடப்பட்டிருந்தன.

இது தொடர்பில் வரக்காப்பொல பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, கேகாலை குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்தநிலையில், வத்தளை பொலிஸ் பிரிவுட்குட்பட்ட எந்தரமுல்ல பிரதேசத்தில் வைத்து 32 வயதுடைய  குறித்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.