நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களுடைய தனித்துவத்தை நிலை நாட்ட வேண்டிய ஒரு தேர்தலாக அமைந்துள்ளது- சாள்ஸ் நிர்மலநாதன்…

ஆயுதப் போராட்டத்தின் பிற்பாடு தமிழர்களுக்கு இருக்கின்ற ஒரே ஒரு விடையமான எங்களுடைய மக்கள் இலங்கையில் கௌரவமாக வாழக்கூடிய வகையில் வகி பாகங்களை செய்யக்கூடிய வகையில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இருக்கின்ற தீர்மானத்தை முழுமையாக, ஒற்றுமையாக பயன்படுத்தி நாங்கள் எங்களுடைய மக்களினுடைய தீர்வை வெண்றெடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(23) மதியம் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,
நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களுடைய தனித்துவத்தை நிலை நாட்ட வேண்டிய ஒரு தேர்தலாக அமைந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலின் பிற்பாடு யுத்த காலத்தில் இருந்து முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸ சிங்கள மக்களின் பெறும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலை தமிழ் மக்கள் என்ன விதமாக அனுக வேண்டும்.தமிழ் மக்களின் தனித்தவத்தை நிலை நாட்ட வேண்டும்.
தனித்துவத்தின் அடிப்படையில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையை ஒரு குழுவாக தனிப்பட்ட நபருக்கு அப்பால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் குழு, புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கின்ற அமைப்புக்களை  உள்ளடக்கிய ஒரு குழுவாகவும் இயங்கி நாங்கள் முழுமையாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையை பயன்படுத்த வேண்டும்.ஐ.நா.மனித உரிமைகள் பேரவை என்பது வெறுமனே தற்செயலாக உறுவாகியது இல்லை.
நீண்ட கால தமிழர்களுடைய விடுதலைக்காக அது ஜனநாயக போராட்டமாக இருக்கலாம், ஆயுதப்போராட்டமாக இருக்கலாம்,  ஆயுதப் போராட்டத்தின் பிற்பாடு தமிழர்களுக்கு இருக்கின்ற ஒரே ஒரு விடையமான எங்களுடைய மக்கள் இலங்கையில் கௌரவமாக வாழக்கூடிய வகையில் வகி பாகங்களை செய்யக்கூடிய வகையில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இருக்கின்ற தீர்மானத்தை முழுமையாக ஒற்றுமையாக பயன்படுத்தி நாங்கள் எங்களுடைய மக்களினுடைய தீர்வை வெண்றெடுக்க வேண்டும்.
அதற்கு தமிழ் மக்கள் ஒரே அணியின் கீழ் செயல்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தி எதிர் காலத்தில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையை நாங்கள் ஒரு குழுவாக பயன்படுத்திச் செல்ல வேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தற்போது மூன்று கட்சிகள் இருக்கின்றது. அக்கட்சியில் இருக்கின்ற ஒரு சில நபர்களுடைய கருத்து ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களாக இருந்தாலும் எக்காலத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய முடிவுகள்  தமிழ் மக்களுக்கு எதிரானதாக அமைந்தது இல்லை.
மக்கள் நலன் சார்ந்த முடிவுகளே.அந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இருந்த வளங்களை பயன்படுத்தி மக்கள் நலன் சார்ந்த முடிவுகளையே எடுத்துள்ளது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பில் முன் வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் என்பது தேர்தல் அரசியல் நோக்கம் கொண்டது.தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் அரசியல் செய்ய முடியாதவர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பையும்,மக்களையும் பிரிக்க நினைக்கின்றவர்கள் தான் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மீது குற்றம் சுமத்துகின்றனர்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கட்சி முடிவு என்பது மக்கள் நலன் சார்ந்த அக் காலப்பகுதியில், அச் சூழ்நிலையில் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளையே எடுத்துள்ளது.
இனியும் ஒரு பலமான அணியாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் இருக்கும்.
தொடர்ச்சியாக தமிழர்களின் தனித்துவத்தையும் எங்களுடைய பிரதேசத்தில் இருக்கின்ற மக்களினுடைய தேவைகளையும், எமது கிராமங்களில் இடம் பெறுகின்ற சிங்கள குடியேற்றங்கள்,தொல் பொருள் திணைக்களத்தினால் எங்களுடைய அடையாளங்கள் அழிக்கப்படுகின்றது.
இவ்வாறான விடையங்கள் கையாளப்பட வேண்டும்.தமிழ் தேசியக்கூட்டமைப்பு பலமான அணியாக பாராளுமன்றத்தில் இருக்கின்ற போது இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
தற்போது ஆளுகின்ற அரசாங்கம் தமிழ் மக்களின் வாக்கினை பிரிப்பதற்காக அரசாங்கம் சார்ந்த 20 இற்கும் மேற்பட்ட கட்சிகள் இன்று வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுகின்றது.
குறித்த கட்சிகள் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்கான காரணம் பொதுஜன பெரமுன கட்சியூடாக ஒரு சிங்கள வேட்பாளரை பாராளுமன்ற உறுப்பினராக ஆக்குவதற்கு வன்னி பிரதேசத்தில் வேவ்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களை இறக்கி தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்து வன்னியில் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொண்டு வரும் செயற்பாடே தற்போது இடம் பெற்று வருகின்றது.
வன்னி மாவட்டம் மக்கள் மிகவும் தெழிவாக இருக்கின்றார்கள். 9 வேட்பாளர்களில் யாரை ஏற்றுக் கொள்ளுகின்றார்கள் என்பதற்கு அப்பால் வீட்டுச்சின்னம் என்பது தமிழர்களினுடைய ஜனநாயக உரிமைகளுக்காகவும், தமிழர்களின் விடுதலைக்காகவும் உறுவாக்கப்பட்டு எல்லோறும் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதற்காக உறுவாக்கப்பட்ட ஒரு அமைப்பு.அந்த கொள்கையில் மக்கள் தெழிவாக உள்ளனர்.
-தமிழ் தேசியக்கூட்டமைப்பில் போட்டியிடுகின்றவர்களின் விருப்பு இலக்கங்கள் தொடர்பாக மக்கள் முடிவுகளை எடுத்துக் கொள்ளட்டும்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒரு பலமான அணியாக எதிர் காலத்தில் இல்லாது விட்டால் தமிழ் மக்களுக்கு எதிர் காலத்தில் ஒரு பாதீப்பை ஏற்படுத்தும்.
பாராளுமன்ற தேர்தலின் பிற்பாடு மக்களினுடைய கருத்துக்களை அறிந்து ஒவ்வொரு தீர்மானங்களையும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு எடுக்கின்ற போது மக்களின் தீர்மானங்களை அறிந்து தான் முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
எனவே பாராளுமன்ற தேர்தலின் பிற்பாடு மக்களினுடைய கருத்துக்களை அறிந்து எமது கட்சியினுடைய முடிவு இருக்கும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.