சட்டவிரோதமாக மீன்பிடிக்கு பாவித்த வலையும், மீன்களையும் அழிக்க நீதவான் உத்தரவு. மன்னாரில் சம்பவம்…

மன்னார் எருக்கலம்பிட்டி ஆமைப்படுக்கை கடற்பரப்பில் சட்டவிரோத
மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற
நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜ் முன்னிலையில் ஆஐர்படுத்தப்பட்டபோது
பிடிக்கப்பட்ட மீன்களையும் தடை செய்யப்பட்ட வலையையும் அழிக்க உத்தரவு
பிறப்பித்துள்ளார்.

திங்கள் கிழமை (22.06.2020) இரவு மீனவர் ஒருவர் மன்னார் எருக்கலம்பிட்டி
ஆமைப்படுக்கை என்னும் கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலையின் மூலம்
மீன்பிடியில் ஈடுபட்டுள்ளார்.

அப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் இவ் மீனவனை
வலையுடனும் பிடிக்கப்பட்ட மீன்களுடன் கைது செய்து மன்னார் மாவட்ட
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவ் சந்தேக நபரை மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் செவ்வாய் கிழமை
(23.06.2020) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர்
கணேசராஜ் முன்னிலையில் ஆஐராக்கியபோது சந்தேக நபரான இவ் மீனவனை ஒரு லட்சம்
ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் பிடிக்கப்பட்ட ஏழு கிலோ
மீன்களையும் அத்துடன் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலையும் அழித்து விடும்படி
நீதிபதி கட்டளை பிறப்பித்துள்ளார்.
இவ் வழக்கு விசாரனையை எதிர்வரும் 31.08 2020 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.