இணைப்பாடவிதான செயற்பாடுகளை வரையறை செய்யுமாறு அறிவுறுத்தல்!

எதிர்வரும் சில மாதங்களுக்கு இணை பாடவிதான செயற்பாடுகளை வரையரை செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் M.H.M. சித்ராநந்தவினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், விடுபட்டுள்ள கற்கைநெறிகளை முழுமையாக பூர்த்திசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகளுக்காக இந்த காலப்பகுதியை பயன்படுத்துமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலைநேர ஒன்றுகூடல், நாளாந்த நிகழ்வுகள் உள்ளிட்ட இணை பாடவிதான செயற்பாடுகளை வரையரை செய்யுமாறும் பாடசாலை அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பங்குபற்றக்கூடிய உடற்பயிற்சி செயற்பாடுகள் சுகாதார வழிமுறைகளுடன் பின்பற்ற வேண்டும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.