அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகின்றது!

ன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று(புதன்கிழமை) கூடவுள்ளது.

நாடாமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் சான் விஜயதுங்க ,ந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று மாலை 6 மணிக்கு அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையில் காணப்படும் உறுப்பினர்களுக்கான வெற்றிடத்திற்கு ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.