வில்பத்து விவகாரம் – ரிஷாட்டிற்கு எதிரான மனு குறித்து 31ஆம் திகதி தீர்ப்பு

வில்பத்து காடழிப்பு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் நீதி மையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு இன்று (புதன்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது ஜனக் டி சில்வா மற்றும் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன ஆகிய நீதிபதிகள் அடங்கிய மேன்முறையீட்டு நீதிபதிகள் குழாமினால் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள மறிச்சிகட்டு வனப்பகுதிக்கு சொந்தமான பிரதேசத்தில் காடழிப்பு மேற்கொண்டு அனுமதியற்ற கட்டுமானங்களை மேற்கொண்டதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட தரப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.