மாலைதீவில் சிக்கியிருந்த 169 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாலைதீவில் சிக்கியிருந்த 169 இலங்கையர்கள் இன்று (புதன்கிழமை) நாடு திரும்பியுள்ளனர்.

குறித்த அனைவரும் மத்தளை மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, பரிசோதனை அறிக்கைகள் வெளிவரும் வரையில் அவர்கள் அனைவரும் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவல் சிக்கித் தவித்த இலங்கையர்கள் 154 பேர் இன்று காலை தாயகம் திரும்பியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்