சற்றுமுன் சி.ஐ.டியில் முன்னிலையானார் கருணா!

கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சற்றுமுன் சி.ஐ.டி. தலைமையகமான 4 ஆம் மாடியில் முன்னிலையாகி உள்ளார்.

கருணா வெளியிட்டுள்ள, சர்ச்சைக்குரிய கருத்து, அதன் உள்ளடக்கத்தின் உண்மைத் தனமை தொடர்பில் குற்றப் புலனயவுத் திணைக்களத்தின் சிறப்புக் குழு விசாரணைகளை கடந்த 3 தினக்களுக்கு முன்னர் ஆரம்பித்தது.

கடந்த மூன்று நாட்களாக கருணா சி.ஐ.டி.யில் ஆஜராகாத நிலையில், நேற்று முன்தினம் தனக்கு சுகயீனம் காரணமாக விசாரணைக்கு சமூகமளிக்க முடியாது எனவும் சுகம் பெற்றதும் வருவதாகவும் சட்டத்தரனி ஊடாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் சி.ஐ.டிக்கு சமூகமளித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்