கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 2007 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதரா அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 6 பேர் இன்று (வியாழக்கிழமை) நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கடற்படையினர் அறுவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 40 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து இன்று வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய இந்த கொடிய நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 602 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம் தொற்றுக்கு உள்ளான 394 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் நாட்டில் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளான 11 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.