க.பொ.த உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் குறித்து அறிவிப்பு

க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதி மற்றும் பரீட்சைகளை நடத்துவதற்கான முறைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக உரிய துறைகளுடன் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடி திகதியை தீர்மானிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஆரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சுக்கு அமைச்சரவையால் வழங்கப்பட்டுள்ள அனுமதிகள் தொடர்பாக தெளிவுபடுத்தும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் பிரத்தியேக வகுப்புகளுக்கு மேலதிகமாக மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வசதிகள் குறித்து ஆராயுமாறு சுகாதரா அமைச்சருக்கு ஜனாதிபதி இதன்போது பரிந்துரை விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.