அரசியல் கைதிகளை விடுவிக்க தகவல் திரட்டுகின்றார் கோட்டா – விமல் தெரிவிப்பு

“தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பல வருடங்களாக  சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தகவல்களைத் திரட்டி வருகின்றார்.”

– இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

சிங்கள தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சிறைச்சாலைகளில் பல வருடங்களாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி விடுதலை செய்வார் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குத் தெரியும். ஆனால், இதில் பெயரைப் போட்டுக் கொள்வதற்காகவே அது சம்பந்தமாக பிரதமரைச் சந்தித்து சுமந்திரன் தரப்பு பேச்சு நடத்தியது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.