நவீன் ஒரு விஷமி! ஐ.தே.கவை அவரே பிளவுபடுத்தினார் என்று இராதா பகிரங்க குற்றச்சாட்டு

ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுப்படுத்தியது நவீன் திஸாநாயக்கதான் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பூண்டுலோயா கயப்புக்கலை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் எமது தமிழ் முற்போக்குக் கூட்டணி இணைந்து செயற்பட்டது. ஆனால், நவீன் திஸாநாயக்க போன்ற சில விஷமிகளின் தாக்கத்தால் ஐக்கிய தேசியக்  கட்சியிலிருந்து விலக வேண்டிய தேவை ஏற்பட்டது.

தற்போது சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுகின்றோம். நிச்சயம் வெற்றி பெறுவோம்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.