பொறுப்புகூறல்: இலங்கைக்கும் பிரிட்டனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை
நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் நீதி ஆகிய விடயங்கள் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கும் பிரிட்டன் அமைச்சுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவுக்கு பிரிட்டனின் தென்னாசியா மற்றும் பொதுநலவாயத்திற்கான அமைச்சர் அகமட் பிரபு, தொலைபேசியில் அழைப்பினை ஏற்படுத்தி, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பதிலளிக்கும் கடப்பாடுகள் ஆகியவற்றின் முக்கியத்துவம் தொடர்பாக அகமட் பிரபு தெளிவுப்படுத்தியுள்ளார்.
மேலும் காலநிலை மாற்றம் மற்றும் பொதுநலவாயம் போன்ற இருதரப்பிற்கும் முக்கியமான விடயங்கள் குறித்தும் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறித்த தொலைபேசி உரையாடலின்போது குறிப்பிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துக்களேதுமில்லை